ஒவ்வொரு பெண்ணின் சராசரி நாளும் கிட்டத்தட்ட வழக்கமானது... உங்கள் குடும்பத்திற்கு கவனம் செலுத்துவது, காலக்கெடுவை பூர்த்தி செய்வது மற்றும் சிறிது நேரம் ஓய்வெடுப்பது. ஆனால் இவை அனைத்தின் நடுவில், ஆரோக்கியம் தானாகவே பின்தங்குகிறது என்பதை நீங்கள் கவனித்தீர்களா? உங்கள் உடற்பயிற்சி பற்றி நாங்கள் பேசவில்லை. பெண்களை பாதிக்கும் நோய்கள் மற்றும் அவற்றின் ஆரம்ப கட்டங்களில் நீங்கள் அவற்றை தடுக்க விரும்பினால் நீங்கள் தவற விட முடியாத மருத்துவ பரிசோதனைகள் பற்றி நாங்கள் பேசுகிறோம்.
கொலஸ்ட்ரால் (லிபிட் சுயவிவரம்) பரிசோதனை
பெண்கள் புற்றுநோயை காட்டிலும் இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. மெனோபாஸ் உங்கள் கொலஸ்ட்ரால் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது, எனவே இது 45 வயதிலிருந்து தொடங்குகிறது ; நீங்கள் வழக்கமாக கொலஸ்ட்ரால் பரிசோதனைகளை செய்ய வேண்டும். உண்மையில், நீங்கள் புகைபிடித்தால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டால், அல்லது இதய பிரச்சனைகளுடன் உள்ள குடும்ப நபர்கள் இருந்தால், முன்பே பரிசோதனையை தொடங்குங்கள்.
மருத்துவ மார்பக பரிசோதனை மற்றும் மாமோகிராம்
மார்பக புற்றுநோய் பெண்களில் மிகவும் கடுமையான புற்றுநோய்களில் ஒன்றாகும். 20 வயதிலிருந்தே உங்கள் மருத்துவரிடம் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். நீங்கள் 40 ஐ தொட்டவுடன், ஆண்டிற்கு குறைந்தபட்சம் ஒருமுறையாவது மாமோகிராம்களை பெற தொடங்குங்கள்.
பாப் ஸ்மியர்
இது ஒரு எச்பிவி தொற்றுநோயை சரிபார்ப்பதற்கான சிறந்த வழியாகும், இது சர்விக்கல் புற்றுநோயை தடுக்க உதவுகிறது. நீங்கள் பாலியல் ரீதியாக செயல் பட தொடங்கியவுடன், அல்லது நீங்கள் 21 வயதை தொட்டவுடன் முன்னதாகவே பரிசோதனை செய்ய தொடங்குங்கள். பரிசோதனை முடிவுகளைப் பொறுத்து, நீங்கள் பரிசோதனையை எப்போதெல்லாம் எடுக்க வேண்டும் என்பதை உங்கள் மருத்துவர் உங்களுக்கு அறிவுறுத்துவார்.
போன்-மினரல் டென்சிட்டி பரிசோதனை
மெனோபாஸ்-க்கு பின்னர், ஒரு பெண் தனது எலும்பு அடர்த்தியில் 5-7 சதவீதத்தை இழக்க நேரிடும். நீங்கள் ஆஸ்டியோபோரோசிஸ்-க்கான ஆபத்தில் இருக்கிறீர்களா என்பதை கண்டறிய, குறிப்பாக நீங்கள் புகைபிடித்தால், அல்லது எந்தவொரு நான்-டிரமாட்டிக் ஃப்ராக்ச்சர்களாலும் பாதிக்கப்பட்டிருந்தால் மெனோபாசிற்கு பிறகு நீங்கள் போன்-மினரல் டென்சிட்டி பரிசோதனையை பெறுவது முக்கியமாகும்.
கலனோஸ்கோபி
நீங்கள் பெருங்குடல் புற்றுநோய் வளர்ச்சி அபாயத்தில் இருக்கிறீர்களா என்பதை கண்டறிய, 50 வயதிலிருந்தே ஒவ்வொரு சில ஆண்டுகளுக்கும் நீங்கள் காலனோஸ்கோபியை மேற்கொள்ள வேண்டும். இந்த நோயின் குடும்ப வரலாறு உங்களிடம் இருந்தால், முன்னரே பரிசோதனை செய்யுங்கள்.
ஹார்ட்-ஹெல்த் பரிசோதனை
மாரடைப்புகள் மற்றும் பிற இதய பிரச்சனைகளின் ஆபத்து எதுவும் உங்களுக்கு இல்லை என்பதை உறுதி செய்ய, ஒரு வழக்கமான ஹார்ட்-ஹெல்த் பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். குறிப்பாக, நீங்கள் 45 வயதிற்கு மேற்பட்டவராக இருந்து மாரடைப்புகள் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தின் குடும்ப வரலாறு இருந்தால் இது அவசியமாகும்.
நீரிழிவு பரிசோதனை
உங்கள் குடும்பத்தில் நீரிழிவு நோய்களின் வரலாறு இருந்தால் அல்லது நீங்கள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ராலில் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் நீரிழிவை பெறவில்லை என்பதை உறுதி செய்ய நீங்கள் வழக்கமான இரத்த சர்க்கரை பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
எச்ஐவி மற்றும் பிற எஸ்டிடி-களுக்கான பரிசோதனைகள்
பாலியல் ரீதியாக செயலில் இருக்கும் எந்த பெண்ணும் எச்ஐவி பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். ஹெர்ப்ஸ் மற்றும் கிளாமிடியா போன்ற மற்ற எஸ்டிடி-களுக்கும் நீங்கள் பரிசோதனை செய்யப்பட வேண்டுமா என்பதை அறிய உங்கள் மருத்துவரிடம் கேட்கவும். அதிகம் போல் தெரிகிறது, அல்லவா? ஆனால் மருத்துவ பராமரிப்பு என்று வரும்போது, பழைய விஷயங்கள் உண்மையைக் கொண்டுள்ளன - வரும் முன் காப்பதே, சிகிச்சையை விட சிறந்தது! ஆராயுங்கள்
பெண்களுக்கான மருத்துவ காப்பீடு குறிப்பிட்ட நோய்களுக்கான காப்பீட்டுடன். எங்கள் முழு தயாரிப்பு வரம்பையும் பார்த்து
ஆன்லைன் மருத்துவ காப்பீடு இன்றே காப்பீடு பெறுங்கள்!
Undergoing medical tests
about the various aspects related to AIDS. People have also been provided numerous opportunities to get themselves tested and get a clear understanding of their HIV