இங்கிலீஷ்

Claim Assistance
Get In Touch
How to Download COVID Vaccination Certificate?
நவம்பர் 25, 2021

உங்கள் கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வதற்கான படிநிலைகள்

நீங்கள் ஒரு பொறுப்பான குடிமகனாக இருந்து உங்கள் தடுப்பூசியை செலுத்தியிருந்தால் - முதல் அல்லது இரண்டும், உங்கள் கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழை ஆன்லைனில் எளிதாக பதிவிறக்கம் செய்யலாம். நீங்கள் கோவிஷீல்டு, கோவாக்சின் அல்லது ஸ்புட்னிக் என எந்தவொரு தடுப்பூசி எடுத்திருந்தாலும் பரவாயில்லை, நீங்கள் விரும்பும் ஆன்லைன் ஆதாரங்களில் இருந்து கோவிட் தடுப்பூசி சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யலாம். நீங்கள் பதிவிறக்கம் செய்யும் சான்றிதழில் உங்கள் தடுப்பூசியின் தேதி மற்றும் நேரம் உட்பட உங்கள் தடுப்பூசி பற்றிய அனைத்து விவரங்களும் இருக்கும். உங்கள் கோவிட் 19 தடுப்பூசி சான்றிதழை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது தெரியவில்லை என்றால், இந்த பிரத்யேக பதிவு உங்களுக்காக மட்டுமே. விரைவாக தொடங்கலாம் ஆனால் அதற்கு முன்னர், உங்கள் கோவிட் 19 தடுப்பூசி சான்றிதழ் ஏன் தேவை என்பதை புரிந்துகொள்வோம்.

உங்களுக்கு ஏன் தடுப்பூசி சான்றிதழ் தேவை?

கோவிட் 19 தடுப்பூசி மோசமான வைரஸிலிருந்து உங்களை பாதுகாக்கிறது, இறுதியில் லேசான அறிகுறிகளை அனுபவிக்க வழிவகுக்கும், இதற்கு சுய-தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைகளால் வீட்டிலேயே எளிதாக சிகிச்சையளிக்கப்படலாம். தவறான கருத்துக்கு மாறாக, நீங்கள் வைரஸால் பாதிக்கப்பட மாட்டீர்கள் என்பதை தடுப்பூசி உறுதி செய்யவில்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில், நீங்கள் இன்னும் வைரஸால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருக்கிறீர்கள் மற்றும் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு வைரஸை பரவும் அபாயத்தில் இருப்பீர்கள். இதுபோன்ற நிகழ்வுகளின் பின்விளைவுகளைத் தடுக்க, பல மாநிலங்கள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் விருந்தோம்பல் இடங்கள் கூட குடிமக்கள் தங்கள் தடுப்பூசிக்கான ஆதாரத்தை எடுத்துச் செல்வதைக் கட்டாயமாக்கியுள்ளன, அதாவது உங்களின் கோவிட் 19 தடுப்பூசி சான்றிதழ். ஓய்வு அல்லது வணிக நோக்கங்களுக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நுழைவதற்கு தகுதிப் பெற, நெகடிவ் ஆர்டி-பிசிஆர் அறிக்கை அல்லது தடுப்பூசி சான்றிதழை எடுத்துச் செல்வது கட்டாயமாகும். தடுப்பூசி சான்றிதழ் அதிகமாக அணுகக்கூடியது என்றாலும், உங்கள் சான்றிதழின் பதிவிறக்கம் செய்யப்பட்ட நகலை உங்கள் போன் அல்லது நீங்கள் பயன்படுத்தும் ஏதேனும் கையடக்க சாதனத்திலோ வைத்திருப்பது எப்போதும் நல்லது. இந்த புரிதலுடன், பல்வேறு போர்ட்டல்களில் இருந்து உங்கள் சான்றிதழை நீங்கள் எவ்வாறு பதிவிறக்கம் செய்ய முடியும் என்பதைப் பார்ப்போம்.

CoWin மூலம் கோவிட் தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்யவும்

எங்கள் முந்தைய பதிவுகளில் ஒன்றில், CoWin ஐ பயன்படுத்தி உங்கள் தடுப்பூசிக்காக நீங்கள் எவ்வாறு பதிவு செய்ய முடியும் என்பதற்கான ஒரு விரிவான பதிவை நாங்கள் பகிர்ந்திருப்போம். எனவே, நீங்கள் CoWin போர்ட்டலைப் பயன்படுத்தியிருந்தால், போர்ட்டலில் இருந்து சான்றிதழை நீங்கள் எவ்வாறு பதிவிறக்கம் செய்ய முடியும் என்பதை உள்ளுணர்வாகச் சொல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். தெரியாதவர்களுக்கு, நீங்கள் CoWin தடுப்பூசி சான்றிதழை எவ்வாறு பதிவிறக்கம் செய்ய முடியும் என்பதை இங்கே காணுங்கள்.
  • அணுகவும் CoWin இணையதளம்.
  • உள்நுழைக பட்டன் மீது கிளிக் செய்யவும். உங்கள் தடுப்பூசி அப்பாயிண்ட்மென்டை திட்டமிடும்போது நீங்கள் ஏற்கனவே முதல் முறை பதிவு செய்திருப்பீர்கள் என்பதால், உங்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணில் நீங்கள் பெறும் ஓடிபி-ஐ உள்ளிடுவதன் மூலம் நீங்கள் எளிதாக உள்நுழையலாம்.
  • நீங்கள் உள்நுழைந்ததும், நீங்கள் டோஸ்கள் பிரிவைப் பார்க்க முடியும், அங்கு நீங்கள் எடுத்துள்ள டோஸ்களைப் பொறுத்து, பிரிவு பச்சை நிறத்தில் தோன்றும்.
  • இப்போது பிரிவுக்கு செல்லவும், அங்கு செயல்படுத்தப்பட்ட பதிவிறக்க பட்டனை நீங்கள் காண முடியும். நீங்கள் CoWin தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்ய விரும்பினால், டோஸ் 1 இல் உள்ள சான்றிதழைக் கிளிக் செய்யவும் அல்லது டோஸ் 2 சான்றிதழ் மீது கிளிக் செய்யவும்.
  • உங்கள் சாதனத்தில் சான்றிதழ் பிடிஎஃப் அல்லது ஒரு சாஃப்ட் காபியாக பதிவிறக்கப்படும்.
  • உங்கள் அமர்விற்கு பிறகு போர்ட்டலில் இருந்து வெளியேறவும்.

Aarogya Setu செயலியை பயன்படுத்தி கோவிட் தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்யவும்

Aarogya Setu செயலியில் இருந்து உங்கள் சான்றிதழை பதிவிறக்கம் செய்ய விரும்பினால், நீங்கள் செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் அவ்வாறு செய்யலாம். நீங்கள் ஏற்கனவே அதை பதிவிறக்கம் செய்திருந்தால், செயலியை திறந்து CoWin டேபை அணுகவும்.
  • அதன் பின்னர், தடுப்பூசி சான்றிதழை தேர்ந்தெடுக்கவும்.
  • உங்கள் டோஸைப் பெறும் நேரத்தில், நீங்கள் 13-இலக்க குறிப்பு எண்ணை பெற்றிருப்பீர்கள். இங்கே எண்ணை உள்ளிடவும் மற்றும் பின்னர் சான்றிதழைப் பெறுக பட்டனை கிளிக் செய்யவும்.
  • உங்கள் சாதனத்தில் சான்றிதழ் பதிவிறக்கப்படும்.

Digilocker ஐ பயன்படுத்தி கோவிட் 19 தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்யவும்

Digilocker என்பது உங்கள் தடுப்பூசி சான்றிதழை எளிதாக பதிவிறக்கம் செய்ய உங்களை அனுமதிக்கும் மற்றொரு மூலதன போர்ட்டல் ஆகும். இதன் செயல்முறை Aarogya Setu செயலியைப் பயன்படுத்தியதற்கு ஒத்தது.
  • உங்கள் சாதனத்தில் Digilocker செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்து உங்கள் தனிநபர் விவரங்களை குறிப்பிடுவதன் மூலம் அதில் பதிவு செய்ய வேண்டும்.
  • முடிந்ததும், நீங்கள் சுகாதாரப் பிரிவுக்குச் சென்று சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தைக் கண்டறிய வேண்டும்.
  • நீங்கள் அங்கு தடுப்பூசி சான்றிதழ் விருப்பத்தேர்வை காண்பீர்கள்.
  • உங்கள் 13-இலக்க குறிப்பு எண்ணை உள்ளிடவும்.
  • பதிவிறக்கத்திற்கு சான்றிதழ் தயாராக இருக்கும்.
ஒருவேளை நீங்கள் உங்கள் குறிப்பு எண்ணை மீட்டெடுக்க முடியாவிட்டால் அல்லது உங்களிடம் அது இல்லை என்றால், உங்கள் சான்றிதழின் நகலைப் பெறுவதற்கான எளிதான வழி CoWin தடுப்பூசி சான்றிதழ் பதிவிறக்க விருப்பத்தை தேர்வு செய்வதாகும். நீங்கள் சான்றிதழை பதிவிறக்கியவுடன், அனைத்து விவரங்களும் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்க்கவும். இந்த போர்ட்டல்கள் தொழில்நுட்பத்தில் குறைந்த நாட்டம் கொண்ட நபர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, உங்கள் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து நீங்கள் பொறுப்பாக பயணம் செய்வதை உறுதி செய்யுங்கள். மற்றும் நீங்கள் உங்கள் இரண்டாவது டோஸை எடுக்கவில்லை என்றால், அதன்படி ஒரு அப்பாயிண்ட்மெண்டை திட்டமிடவும்.

முடிவுரை

தற்போதைய கோவிட்-19 சூழ்நிலையானது, கணிக்க முடியாத நேரங்கள் மற்றும் மருத்துவத் தேவைகள் ஆகியவை நிதிச் சுமையை ஏற்படுத்தக்கூடும் என்பதை நமக்கு உணர்த்தியுள்ளது. நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அதிக ஆபத்துகள் இருப்பதால், காப்பீட்டை கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர், அதாவது மருத்துவ காப்பீடு திட்டம் இந்த கணிக்க முடியாத நேரங்களில் உதவக்கூடும்.

இந்தக் கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா? இதை மதிப்பிடவும்

சராசரி மதிப்பீடு 5 / 5 வாக்கு எண்ணிக்கை: 18

இதுவரை மதிப்பீடு எதுவும் இல்லை! இந்த பதிவை மதிப்பிடும் முதல் நபராக இருங்கள்.

இந்த கட்டுரையை விரும்புகிறீர்களா?? உங்கள் நண்பர்களுடன் இதனை பகிருங்கள்!

உங்கள் சிந்தனைகளை பகிருங்கள். கீழே ஒரு கருத்தை இடுங்கள்!

பதிலளிக்கவும்

உங்கள் இமெயில் முகவரி வெளியிடப்படாது. அனைத்து இடங்களையும் நிரப்புக