"நமது பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய ஒரே விஷயம் நடனம்"
- ஜேம்ஸ் பிரவுன்
சரிதான், அல்லவா? நடனமாடுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள் மற்றும் அதே நேரத்தில் சில கலோரிகளை குறைத்திடுங்கள்! நீங்கள் முயற்சிக்க வேண்டிய 7 நடனங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
1. கதக்
கதக் இந்தியாவின் மிக முக்கியமான கிளாசிக்கல் நடனங்களில் ஒன்றாகும். 'கதா' என்ற வார்த்தையில் இருந்து பெறப்பட்டது அதாவது "கதை சொல்லும் கலை", கதக் அரசர் காலங்களில் இருந்தே மிகப்பெரிய முறையில் உருவாகியுள்ளது. இது உங்களை வெளிப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல் இது மூட்டு வலியையும் நீக்குகிறது, உங்கள் உடலை மேம்படுத்துகிறது மற்றும் சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது. கதக்கின் ஒரு அமர்வில் நீங்கள் சுமார் 400-600 கலோரிகளை குறைக்கலாம்
2. சால்சா
கிளாசி, எனர்ஜெட்டிக் மற்றும் சென்சுவல். சால்சா இவை அனைத்தின் கலவையாகும். நியூயார்க்கில் 1970-களில் தொடங்கப்பட்ட சால்சாவில் அதிக ஸ்வேயிங், பெண்டிங் மற்றும் ஸ்விர்ல்களை கொண்டுள்ளது. சால்சா நடனங்கள் உங்கள் உடலை நெகிழ்வாக மாற உதவுகின்றன மற்றும் இது உங்கள் உடல் வடிவமைப்பை அழகாக்கவும் உதவுகிறது. ஒரு 30-நிமிட சால்சா நடனம் உங்கள் 300 கலோரிகளை குறைக்கும்.
3. பெல்லி டான்ஸ்
பாப் பாடகர் ஷகிரா மற்றும் பின்னர் கத்ரீனா கைஃப் மூலம் பிரபலமான இந்த நடனம் ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும். மத்திய கிழக்கில் உருவாக்கப்பட்ட இது உங்கள் தசைகளை இறுக்குவதற்கும் தொப்பையை குறைப்பதற்குமான ஒரு சிறந்த வழியாகும். பெல்லி டான்சிங்கின் மூலம் ஒரு மணிநேரத்தில் சுமார் 300 கலோரிகளை குறைக்கலாம். உங்கள் பெண் நண்பர் குழு உடன் முயற்சித்து பாருங்கள். அற்புதமாக உள்ளது, அல்லவா?
4. ஹிப்-ஹாப்
எனர்ஜி மற்றும் ஸ்வாக். ஒரு டான்சருக்கு மேலும் என்ன வேண்டும்? இந்த தனித்துவமான நடனம் மிகவும் பிரபலமானது. 1960களில் நியூயார்க்கில் தொடங்கப்பட்டது, இதில் பிரேக்கிங், லாக்கிங் மற்றும் பாப்பிங் ஆகியவை அடங்கும். இது எடையை குறைப்பதற்கான விரைவான மற்றும் மகிழ்ச்சியான வழியாகும். ஹிப்- ஹாப்பிங்கின் ஒரு அமர்வில் சுமார் 300 கலோரிகள் குறைக்கப்படலாம்.
5. பேலட்
கற்றுக்கொள்ள மிகவும் கடினமான நடனமாக கருதப்படும் இது ஒரு மிகவும் அதிநவீன நடன வடிவமாகும். 19 ஆம் நூற்றாண்டில் இத்தாலி மறுமலர்ச்சியில் தோற்றுவிக்கப்பட்டது, இது எளிய, மகிழ்ச்சியான இயக்கங்கள் மற்றும் வலுப்படுத்தப்பட்ட காலணிகளுடன் பாயிண்டட் ஷூக்களின் பயன்பாடு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. பேலட் உங்கள் தொடைகள், இடுப்பு, பின்புறத்தை வலுப்படுத்துகிறது மற்றும் தசையின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. 90- நிமிட பேலட் அமர்வில் சுமார் 500 கலோரிகளை குறைக்கலாம்.
6. சம்பா
அழகான மற்றும் புதுமையான, சம்பா மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு சிறந்த நடனமாகும். 1500-களில் பிரேசிலில் தோற்றுவிக்கப்பட்ட சம்பா பெப்பியான, விரைவான மற்றும் ஒரு சிறந்த ஒர்க்அவுட் ஆகும். இது உங்கள் இடுப்பைச் சுற்றியுள்ள கூடுதல் சதையை இழக்கச் செய்து மிக விரைவான வேகத்தில் இடுப்புகளை குறைக்கிறது.
7. ஃப்ரீஸ்டைல்
இந்த நடனத்தை சிறப்பான டியூன்களுடன் எப்படி வேண்டுமானாலும் ஆடலாம். ஆம், அது ஃப்ரீஸ்டைல்! யாரும் பார்க்காதது போல் நடனம் ஆடுங்கள் மற்றும் ஒரே நேரத்தில் அனைத்தையும் அனுபவித்து எடையை குறைக்கலாம், சிறப்பான விஷயம் அல்லவா?
உங்கள் வழக்கமான நடனங்களுடன் தொடர வேண்டுமா? காத்திருக்க வேண்டாம், இப்போதே தொடங்குங்கள்!
‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்', அல்லவா? பிற்காலத்தில் உங்கள் ஆரோக்கியம் குறையும் நேரங்களில், உங்களை காப்பீடு செய்யுங்கள். மேலும் தகவலுக்கு மருத்துவக் காப்பீடு, எங்கள் இணையதளத்தை அணுகவும்!
This article is a treat for all the dance lovers on the occasion of International Dance Day. Enjoy and keep dancing!