நீங்கள் ஒரு சர்வதேச பயணத்திற்காக உற்சாகமாக இருக்கிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள், சில நாட்களுக்கு முன்பு நீங்கள் கீழே விழுந்து உங்கள் காலை உடைத்துக் கொண்டீர்கள். இது உங்கள் உற்சாகத்தை குறைக்கும், ஆனால் மிக முக்கியமாக, விமான முன்பதிவுக்காக நீங்கள் செலவழித்த தொகையை இழக்க நேரிடும். சரி, இதுபோன்ற சூழ்நிலைகளில்,
பயணக் காப்பீடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. இருப்பினும், உங்கள் விமானம் இரத்து செய்யப்பட்டதற்கான காரணம் செல்லுபடியானதாக இருக்க வேண்டும் மற்றும் பாலிசி விதிகளின்படி உங்கள் டிக்கெட்டுகளுக்கான பணத்தைத் திரும்பப் பெற முடியும். எனவே பயணக் காப்பீட்டு பாலிசியைப் பெறுவதற்கு முன், பயணக் காப்பீடு விமான இரத்துசெய்தலை உள்ளடக்குகிறதா என்பதை உங்கள் காப்பீட்டு வழங்குநரிடம் கேட்க வேண்டும். இந்த தலைப்பைப் பற்றியும், விமானம் இரத்து செய்யப்பட்டால் பயணக் காப்பீடு எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் விரிவாகப் பார்ப்போம்.
பயண விமான இரத்துசெய்தல் காப்பீடு என்றால் என்ன?
விமான இரத்துசெய்தல் காப்பீடு பொதுவாக
விமான பயண காப்பீடு என்றும் அழைக்கப்படுகிறது, இது உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட எதிர்பாராத காரணங்களால் உங்கள் பயணம் இரத்து செய்யப்படும்போது, முன்பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளின் செலவுகளை ஈடுசெய்ய உதவும். அத்தகைய சூழ்நிலையில் காப்பீட்டு வழங்குநர் உங்களிடம் முன்-குறிப்பிட்ட இரத்துசெய்தல் கட்டணத்தை வசூலிக்கலாம். இரத்துசெய்தல் கட்டணம் ஒவ்வொரு காப்பீட்டு வழங்குநருக்கு ஏற்ப மாறுபடலாம். மேலும், உங்கள் ஃப்ளைட்டின் புறப்படும் தேதி குறைவான நேரமாக இருந்தால் இரத்துசெய்தல் கட்டணங்கள் பொதுவாக அதிகமாக இருக்கும். சில சந்தர்ப்பங்களில், விமான புறப்படுவதற்கு வெறும் சில மணிநேரத்திற்கு முன்பு இரத்து செய்யப்பட்டால் அல்லது உங்கள் தரப்பிலிருந்து நோ ஷோ என்றால், அது உங்களுக்கு 100% இரத்துசெய்தல் செலவுக்கு வழிவகுக்கும்.
எனது விமான இரத்துசெய்தல் காப்பீட்டில் என்ன காப்பீடு செய்யப்படுகிறது?
முன்னர் கூறியபடி, விமான இரத்துசெய்தல் பாலிசி வெவ்வேறு காப்பீட்டு நிறுவனங்களுக்கு வேறுபடலாம். இருப்பினும், பெரும்பாலான காப்பீட்டு வழங்குநர்கள் வழங்கும் சில அடிப்படை காப்பீடுகள் உள்ளன. எனவே விமானத்தை இரத்து செய்து ரீஃபண்டை பெற முடியுமா என்ற உங்கள் கேள்விக்கான பதிலை தெரிந்துகொள்ள வேண்டுமா? முதலில் உங்கள் விமான இரத்துசெய்தல் பாலிசியில்
பயணக் காப்பீட்டில் என்ன காப்பீடு செய்யப்படுகிறது என்பதைப் பார்ப்போம்:
- உங்கள் நோய், காயம் அல்லது எதிர்பாராத மரணம் அல்லது உரிமம் பெற்ற மருத்துவரின் உத்தரவின் பேரில் நீங்கள் பயணம் செய்ய தகுதியற்றவர் எனக் கருதும் பயணத் துணை.
- உங்கள் வீட்டிலோ அல்லது நீங்கள் பயணிக்கும் இடத்திலோ ஏதேனும் இயற்கைப் பேரிடர் ஏற்படுதல்.
- ஒரு குடும்ப உறுப்பினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அல்லது இறந்தால் (அவர் உங்களுடன் பயணம் செய்யாவிட்டாலும் கூட).
- பயணத்திற்கான திட்டமிடப்பட்ட தேதியில் சாட்சியாக ஆஜராக நீதிமன்றம் போன்ற சட்ட அதிகாரத்தால் நீங்கள் அழைக்கப்பட்டால்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் நீங்கள் தேர்ந்தெடுத்த காப்பீட்டு நிறுவனம் மற்றும் பாலிசியைப் பொறுத்து மாறுபடலாம். உங்கள் வழக்கு செல்லுபடியாகும் பட்சத்தில், உங்கள் காப்பீட்டாளரிடமிருந்து ஆவணங்களுடன் உங்கள் ப்ரீ-பெய்டு தொகையின் நூறு சதவீதம் உங்களுக்கு திருப்பிச் செலுத்தப்படும்.
எந்தவொரு காரணத்திற்காகவும் நான் விமானத்தை ரத்து செய்யக்கூடிய பயண விமான இரத்து பாலிசி உள்ளதா?
சில காப்பீட்டு வழங்குநர்கள் தங்கள் பாலிசிதாரர்களுக்கு எந்த காரணமும் இல்லாமல் இரத்து செய்யும் விருப்பத்தை வழங்குகிறார்கள் என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படலாம். வழக்கமாக, இது அதிக செலவில் வழங்கப்படுகிறது. இந்த உட்பிரிவின் கீழ், நீங்கள் எந்த குறிப்பிட்ட காரணமும் இல்லாமல் விமான முன்பதிவை இரத்து செய்யலாம் மற்றும் மொத்த தொகையில் குறைந்தபட்சம் 50% - 75% ரீஃபண்டை பெற தகுதியானவராக மாறலாம். அடிப்படை விமான இரத்துசெய்தல் காப்பீட்டைப் போலவே, இந்த நன்மை சில தகுதி வரம்புகளுடன் வருகிறது:
- உங்கள் ப்ரீ-பெய்டு பயணச் செலவில் நூறு சதவீதத்தை நீங்கள் காப்பீடு செய்ய வேண்டும்.
- விமான முன்பதிவின் ஆரம்ப பணம்செலுத்தலின் 10-21 நாட்களுக்குள் பாலிசி எடுக்கப்பட வேண்டும்.
- விமானம் புறப்படுவதற்கு 48 முதல் 72 மணிநேரம் முன்னதாக (பாலிசி திட்டத்தின்படி) நீங்கள் விமானத்தை இரத்து செய்ய வேண்டும்.
- பாலிசியைப் பொறுத்து, காப்பீட்டுத் தொகை 50-75% க்கு இடையில் இருக்கும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (எஃப்ஏக்யூ-கள்)
- நான் பயண நாளில் டிக்கெட்டை இரத்து செய்தால், விமானம் இரத்து செய்த பணத்தை திரும்பப் பெற முடியுமா?
இது நீங்கள் மேற்கொண்ட ஏர்லைன் அல்லது காப்பீட்டு பாலிசியைப் பொறுத்தது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உங்கள் விமானம் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் டிக்கெட்டை இரத்து செய்வது 100% இரத்துசெய்தல் கட்டணங்களுக்கு வழிவகுக்கும்.
- வெளிநாட்டிற்கு பயணம் செய்யும்போது நான் விரிவான பயணக் காப்பீடு அல்லது அடிப்படை பயண விமான இரத்துசெய்தல் காப்பீட்டை பெற வேண்டுமா?
நாட்டிற்கு வெளியே செல்லும் போது விரிவான பயணக் காப்பீட்டைப் பெறுவது எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது, ஏனெனில் இதில் உள்ள அபாயங்கள் அதிகம் மற்றும் முழுமையாகக் காப்பீடு செய்யப்படுவதே பாதுகாப்பான விருப்பமாகும்.
- விமான இரத்துசெய்தல் காப்பீட்டிற்காக எவ்வாறு கோருவது?
உங்கள் பயணத்தை இரத்து செய்வதற்கான காரணத்தை கூறி உங்கள் காப்பீட்டு வழங்குநரிடம் தேவையான ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அதிக நன்மைகளைப் பெறுவதற்கு காப்பீட்டு வழங்குநரிடம் விரைவில் தெரிவிப்பதை உறுதிசெய்யவும்.
- பயணக் காப்பீட்டை வாங்குவதற்கான சில நல்ல மற்றும் உண்மையான பயணக் காப்பீட்டு நிறுவனங்கள் யாவை?
பல நல்ல பயணக் காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன, அதிலிருந்து நீங்கள் ஒரு பயணக் காப்பீட்டைப் பெறலாம் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ், போன்றவை.
முடிவுரை
பயணக் காப்பீடு விமான இரத்துசெய்தலை உள்ளடக்குகிறதா என்ற கேள்விக்கான பதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள தரவு போதுமானதாக உள்ளது. எனவே நீங்களும் வரவிருக்கும் நாட்களில் பயணத்தை திட்டமிடுகிறீர்கள் என்றால், ஒரு காப்பீட்டு வழங்குநர் மூலம் உங்கள் விமான டிக்கெட்களை காப்பீடு செய்வதை உறுதிசெய்யவும், இதனால் எதிர்பாராத சூழ்நிலைகள் மற்றும் அவசர நிலைகளில் நீங்கள் அவற்றிற்கான திருப்பிச் செலுத்தல்களை பெற முடியும்.
பதிலளிக்கவும்