ரெஸ்பெக்ட் சீனியர் கேர் ரைடர்: 9152007550 (மிஸ்டு கால்)
Buy Policy: 1800-209-0144| சேவை: 1800-209-5858 சேவை சாட்: +91 75072 45858
எங்கள் இணையதளத்தை அணுகியதற்கு நன்றி.
ஏதேனும் உதவிக்கு தயவுசெய்து அழைக்கவும் 1800-209-0144
மிகவும் தேடப்பட்ட கீவேர்டுகள்
முன்றாம் தரப்பினர் கார் காப்பீடு
இரு சக்கர வாகனக் காப்பீடு மூன்றாம் தரப்பு
மருத்துவ காப்பீடு மற்றும் அதனுடன் தொடர்புடைய விதிமுறைகளைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம். இருப்பினும், இவற்றை புறக்கணிப்பது நம்மை கடினமான சூழ்நிலைக்கு இட்டுச் செல்லலாம். தன்னார்வ விலக்கு என்பது உங்களின் மருத்துவக் காப்பீடு கோரல் செட்டில்மென்டில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பாலிசி.
தன்னார்வ விலக்கு என்றால் என்ன?
தன்னார்வ விலக்கு, எக்சஸ் என்றும் குறிப்பிடப்படுகிறது, உங்கள் கோரலின் ஒரு பகுதியைக் காப்பீட்டு கவரேஜ் செலுத்துவதற்கு முன்பு நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என்பதைக் குறிக்கிறது. புரியும்படி சொல்லப்போனால், தன்னார்வ விலக்கிற்கான தொகையை நீங்கள் (காப்பீடு செய்யப்பட்டவர்) ஏற்க வேண்டும், அதே நேரத்தில் மீதமுள்ள கோரல் தொகை காப்பீட்டு வழங்குநரால் ஏற்றுக்கொள்ளப்படும்.
உதாரணத்திற்கு
உங்கள் உறுதிசெய்யப்பட்ட தொகை ரூ.5 லட்சம், அதே நேரத்தில் தன்னார்வ விலக்கு ரூ.1 லட்சமாக இருக்கலாம்.
சூழ்நிலை#1: நீங்கள் ரூ.85,000 க்கு கோரலை தாக்கல் செய்கிறீர்கள். இந்த விஷயத்தில், கோரல் மதிப்பு விலக்கு வரம்பை மீறவில்லை என்பதை கருத்தில் கொண்டு, நீங்கள் முழு தொகையையும் செலுத்த வேண்டும்.
சூழ்நிலை#2: நீங்கள் ரூ.2 லட்சம் மதிப்புள்ள கோரலை தாக்கல் செய்கிறீர்கள். இந்த விஷயத்தில், நீங்கள் ரூ.1 லட்சம் (இது தன்னார்வ விலக்கு என்று கருத்தில் கொண்டு) செலுத்த வேண்டும், அதே நேரத்தில் காப்பீட்டாளர் மீதமுள்ள ரூ.1 லட்சத்தை செலுத்துவார்.
தன்னார்வ விலக்கு ஏன் தேவைப்படுகிறது?
காப்பீட்டு நிறுவனங்கள் தன்னார்வ விலக்குகளை தேவையற்ற மற்றும் அடிக்கடி வரும் உரிமைகோரல்களுக்கு எதிராக சாத்தியமான பாதுகாப்புகளாக அமைக்கின்றன. அதன் பின்னணியில் உள்ள காரணம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட கோரல் தொகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை நீங்கள் செலுத்த வேண்டும் என்பதை நீங்கள் அறிந்தால், சிறிய தேவையற்ற கோரல்களைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். இது தாக்கல் செய்யப்பட்டகோரல்களின் எண்ணிக்கையைக் குறைக்கும், இதன் விளைவாக மோசடிகள் மற்றும் நிர்வாகச் செலவுகளும் குறையும்.
தன்னார்வ விலக்குகளின் நன்மைகள்
✓ கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வ விலக்குகள் பாலிசி பிரீமியத்தை குறைக்க உதவும்
✓ தேவையற்ற, முக்கியத்துவமில்லா கோரல்களைத் தாக்கல் செய்வதில் இருந்து விலக்குகள் உங்களை தடுக்கலாம். ஒட்டுமொத்த போனஸைப் பெறுவதற்கான உங்களின் தகுதியில் இது நேரடியான விளைவை ஏற்படுத்துகிறது (தொடர்ந்து பாலிசி காலங்களில் நீங்கள் எந்தக் கோரலையும் தாக்கல் செய்யவில்லை என்றால்).
தன்னார்வ விலக்கில் உள்ள ஒரு பெரிய குறை என்னவென்றால், அது உங்கள் சேமிப்பை அரித்து, உங்களிடம் போதுமான நிதி ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் கூட மருத்துவச் செலவுகளுக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும்.
மேலும் ஆராய்க மருத்துவ காப்பீட்டு அம்சங்கள்
உங்கள் விவரங்களை வழங்கவும்
பொறுப்புத் துறப்பு
நான் இதன் மூலம் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட்-க்கு ஒரு வசதியான நேரத்தில் மீண்டும் அழைக்க ஒரு குறிப்பிட்ட கோரிக்கையுடன் எனக்கு இணையதளத்தில் கிடைக்கும் தொடர்பு எண்ணிற்கு அழைக்க அங்கீகரிக்கிறேன். முழுமையாகவோ அல்லது பகுதியளவு முடக்கப்பட்ட வகையின் கீழ் தேசிய வாடிக்கையாளர் விருப்ப பதிவு (NCPR)-யில் எனது தொடர்பு எண் பதிவு செய்யப்பட்டாலும், எனது கோரிக்கைக்கு பதிலளிக்கப்பட்ட எந்தவொரு அழைப்பும் அல்லது SMS ஒரு தேர்ந்தெடுக்கப்படாத வணிக தகவல்தொடர்பு என்று கருதப்படாது என்று நான் அறிவிக்கிறேன், ஆனால் அழைப்பின் உள்ளடக்கம் பல்வேறு காப்பீட்டு தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அல்லது காப்பீட்டு வணிகத்தின் விளக்கம் மற்றும் கொள்முதல் ஆகியவற்றை விளக்குவதற்கான நோக்கங்களுக்காக இருக்கலாம். மேலும், இந்த அழைப்புகள் தரம் மற்றும் பயிற்சி நோக்கங்களுக்காக பதிவு செய்யப்படும் மற்றும் கண்காணிக்கப்படும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், மற்றும் தேவைப்பட்டால் எனக்கு கிடைக்கும்.
சரியான விலைகூறல் குறிப்பு ID-ஐ உள்ளிடுக