Loader
Loader

Get In Touch

எங்கள் இணையதளத்தை அணுகியதற்கு நன்றி.

ஏதேனும் உதவிக்கு தயவுசெய்து அழைக்கவும் 1800-209-0144

மருத்துவ காப்பீட்டின் கீழ் உறுப்பு தானம் செய்பவரின் செலவுகள்

உறுப்பு தானம் செய்பவரின் செலவுகள்

சில மருத்துவ காப்பீட்டு திட்டங்களில், உறுப்பு தானம் செய்பவரால் ஏற்படும் செலவுகள் காப்பீடு செய்யப்படுகின்றன.

மிகவும் முக்கியமான மருத்துவ சந்தர்ப்பங்களில், உடலில் இருந்து சேதமடைந்த அல்லது சரியாகச் செயல்படாத உறுப்பை அகற்ற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது, அவ்வாறு செய்யாவிட்டால் அது இறப்பிற்கு வழிவகுக்கும். உங்கள் மருத்துவக் காப்பீடு பாலிசி நிச்சயமாக அத்தகைய மருத்துவ செயல்முறையை உள்ளடக்கும். இருப்பினும், உடல் உறுப்பு தானம் செய்பவரின் மருத்துவச் செலவில் எவ்வளவு தொகை வரை நமது மருத்துவ திட்டம் காப்பீடு செய்யும் என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம்.

அனைத்து மருத்துவ காப்பீட்டு திட்டங்களும் உறுப்பு தானம் செய்பவருக்கான அதிக செலவை உள்ளடக்காது என்பதை தெரிந்து கொள்வது முக்கியமாகும்.

பொதுவாக ஒரு உறுப்பு தானம் செய்பவருக்கு ஏற்படும் மருத்துவ செலவுகள் -

1) இணக்கத்தன்மை சோதனை: உறுப்பு தானம் செய்பவரின் உறுப்பு பெறுநரின் உடற்கூறியல் இணக்கத்தன்மைக்கான மதிப்பீட்டிற்கு உட்படுகிறது.

2) மருத்துவமனை உள்ளிருப்புச் சிகிச்சைக்கு முந்தைய செலவுகள்: உறுப்பு தானம் செய்பவரின் உறுப்பு இணக்கமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு வழக்கமாக தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்.

3) மருத்துவமனை உள்ளிருப்புச் சிகிச்சை செலவுகள்: மருத்துவமனை உள்ளிருப்பு சிகிச்சைக்கான செலவில் அறை வாடகை, நர்ஸ் கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்கள் உள்ளடங்கும்.

4) உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: அறுவை சிகிச்சை நிபுணர் கட்டணம் மற்றும் உறுப்பை பொருத்தும் நடைமுறைக்கான செலவு ஆகியவை உள்ளடங்கும்.

5) அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பராமரிப்பு மற்றும் குணமடைதல்: ஒருவரது உடலில் இருந்து ஒரு உறுப்பு அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய பிறகு சிக்கல்கள் ஏற்படுவது பொதுவானதுதான். எனவே, உறுப்பு தானம் செய்தவர் நீண்ட காலம் மருத்துவமனையில் தங்க வேண்டியிருக்கும். அவருக்கு அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய சிகிச்சையும் தேவைப்படலாம்.

உறுப்பு தானம் செய்தவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகும் மருந்து எடுத்துக்கொள்வதைத் தொடரலாம். உறுப்பு தானம் செய்பவருக்கு அடிக்கடி உடல்நலப் பரிசோதனைகள் செய்வது அவசியம்.

உறுப்பு தானம் செய்பவரை உள்ளடக்கும் பெறுநரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவிற்கு மட்டுமே உறுப்பு தானம் செய்பவரின் அறுவை சிகிச்சைக்கானச் செலவுகளை ஈடுகட்டுகிறது.

எனவே, உங்களுக்குத் தேவைப்பட்டால், உங்கள் உறுப்பு தானம் செய்பவருக்கான காப்பீட்டு வரம்புகள் மற்றும் அளவை சரிபார்ப்பது முக்கியமாகும்.

மேலும் ஆராய்க மருத்துவ காப்பீட்டு அம்சங்கள்.

உங்கள் விவரங்களை வழங்கவும்

+91
தேர்ந்தெடுக்கவும்
தயவுசெய்து தயாரிப்பைத் தேர்ந்தெடுக்கவும்
தேர்ந்தெடுக்கவும்
தயவுசெய்து தேர்ந்தெடுக்கவும்

பொறுப்புத் துறப்பு

நான் இதன் மூலம் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட்-க்கு ஒரு வசதியான நேரத்தில் மீண்டும் அழைக்க ஒரு குறிப்பிட்ட கோரிக்கையுடன் எனக்கு இணையதளத்தில் கிடைக்கும் தொடர்பு எண்ணிற்கு அழைக்க அங்கீகரிக்கிறேன். முழுமையாகவோ அல்லது பகுதியளவு முடக்கப்பட்ட வகையின் கீழ் தேசிய வாடிக்கையாளர் விருப்ப பதிவு (NCPR)-யில் எனது தொடர்பு எண் பதிவு செய்யப்பட்டாலும், எனது கோரிக்கைக்கு பதிலளிக்கப்பட்ட எந்தவொரு அழைப்பும் அல்லது SMS ஒரு தேர்ந்தெடுக்கப்படாத வணிக தகவல்தொடர்பு என்று கருதப்படாது என்று நான் அறிவிக்கிறேன், ஆனால் அழைப்பின் உள்ளடக்கம் பல்வேறு காப்பீட்டு தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அல்லது காப்பீட்டு வணிகத்தின் விளக்கம் மற்றும் கொள்முதல் ஆகியவற்றை விளக்குவதற்கான நோக்கங்களுக்காக இருக்கலாம். மேலும், இந்த அழைப்புகள் தரம் மற்றும் பயிற்சி நோக்கங்களுக்காக பதிவு செய்யப்படும் மற்றும் கண்காணிக்கப்படும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், மற்றும் தேவைப்பட்டால் எனக்கு கிடைக்கும்.

சரியான விலைகூறல் குறிப்பு ID-ஐ உள்ளிடுக

  • தேர்ந்தெடுக்கவும்
    தயவுசெய்து தேர்ந்தெடுக்கவும்
  • தயவுசெய்து உங்கள் கருத்தை எழுதவும்

எங்களை தொடர்பு கொள்வது எளிது