Loader
Loader

Get In Touch

எங்கள் இணையதளத்தை அணுகியதற்கு நன்றி.

ஏதேனும் உதவிக்கு தயவுசெய்து அழைக்கவும் 1800-209-0144

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (பிஎம்எஸ்பிஒய்)

Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY) Policy

நீங்கள் பெறுவதை இங்கே காணுங்கள்

ஒவ்வொரு இந்தியருக்கும் காப்பீடு என்பது முக்கியமான ஒன்றாகும்! பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா மூலம், நீங்கள் இப்போது உங்களை 'காப்பீடு செய்யப்பட்டவர்' என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம்! கணிசமான காப்பீட்டை வழங்கும் மலிவான காப்பீடு- இது விபத்து இறப்பு அல்லது இயலாமைக்கு எதிராக பொது மக்களின் பாதுகாப்பாகும். மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? தொடர்ந்து படிக்கவும்.

முதலில், இந்த லட்சியம் கொண்ட, தேசிய அளவிலான காப்பீட்டுத் திட்டத்திற்கு பின்னால் இருக்கின்ற காரணத்தை பார்க்கவும். 2015 இல் தொடங்கப்பட்டது, இந்திய சமூகத்தின் மிகக் குறைந்த வரம்பை அடைய நிதி சேர்க்கையின் நன்மைகளை செயல்படுத்த, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (பிஎம்எஸ்பிஒய்) மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 1 க்கு விபத்து காப்பீட்டை வழங்குகிறது. முக்கிய கண்ணோட்டத்தில் பார்த்தால், இந்த திட்டம் போதுமான காப்பீடு மூலம் கிராமப்புற மற்றும் பாதி கிராமப்புற சமூகங்களுக்கு சமமான வளர்ச்சி வாய்ப்புகளை வழங்க நிதி ஆதாரங்களை திரட்ட வடிவமைக்கப்பட்டுள்ளது.

அது நுகர்வோருக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்று நீங்கள் கேட்கிறீர்களா? காப்பீட்டின் அடிப்படைக் கொள்கையைப் பயன்படுத்துவதன் மூலம், அதாவது அதிக எண்ணிக்கையிலான பங்களிப்பாளர்களிடையே ஆபத்தை பரப்புவதன் மூலம், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா இறப்பு மற்றும் ஊனமுற்றோர் காப்பீட்டை ஆண்டிற்கு வெறும் ரூ. 12/- என்ற பெயரளவு கட்டணத்தில் வழங்குகிறது, குறிப்பாக கிராமப்புறங்களில் வழக்கமான வேலை மற்றும் போதிய மருத்துவச் சேவைகள் இல்லாத காரணத்தால் விபத்துக்குள்ளானவர்களுக்குப் போதிய மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காதவர்களுக்காக, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா 18 முதல் 70 வயது வரை உள்ள அனைத்து இந்திய குடிமக்களுக்கும் கிடைக்கும்.

விவசாயத்தில் ஏற்படும் பயிர் சேதத்தைப் போலவே, விபத்தும் வருமானம் ஈட்டுவதற்கான உங்கள் திறனைக் கடுமையாகக் குறைக்கலாம். இது உங்கள் குடும்பத்தின் செல்வத்தில் பயங்கரமான விளைவை ஏற்படுத்தும், கடன் மற்றும் நிதி நிச்சயமற்ற தன்மையின் வடிவத்தில் பாதிப்பு ஏற்படும். பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவுடன், விபத்து ஏற்பட்டால், மருத்துவச் செலவுகள் தொடர்பாக கடன் பெறுவது தடுக்கப்படும் மற்றும் உங்கள் நிதித் தேவைகள் கவனித்துக் கொள்ளப்படும் என்பதை நீங்கள் உறுதி செய்ய முடியும்.

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்பது ஒரு பரந்த சமூக இயக்கத்தின் ஒரு பகுதியாகும், அதன் குறிக்கோள் பொருளாதாரத் தேவைகளைக் குறைப்பதுடன், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வுச் செலவுகளின் அடிப்படையில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களிடையே உள்ள பிளவைக் குறைப்பதாகும்.

Scroll

பணம்செலுத்தும் முறை

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, பங்கேற்கும் வங்கிகளுடன் கூட்டு சேர்ந்து எந்தவொரு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தாலும் நிர்வகிக்கப்படலாம். உங்கள் உள்ளூர் வங்கி கிளையுடன் இணைந்து, பஜாஜ் அலையன்ஸ் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவின் கீழ் சேவைகளை வழங்குகிறது.

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவின் கீழ் நன்மைகளைப் பெறுவதற்கு, ஒரு வங்கி கணக்கு கட்டாயமாகும். ஏனெனில், யோஜனாவிற்கு நீங்கள் செலுத்தும் பிரீமியம் உங்கள் வங்கி கணக்கிலிருந்து நேரடியாக தானாக டெபிட் செய்யப்படுகிறது.

காப்பீட்டு நிறுத்தம்

18 மற்றும் 70 வயதுக்கு இடையிலான எந்தவொரு இந்திய குடிமகனும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவில் பதிவு செய்யலாம். நீங்கள் தனிநபராக இருந்தாலும், அல்லது குடும்பத்தை ஆதரிக்கக் கூடியவராக இருந்தாலும், தினசரி ஊதியம் பெறுபவராக இருந்தாலும் அல்லது கார்ப்பரேட் அலுவலகத்தில் பணிபுரிபவராக இருந்தாலும், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா அனைவரையும் வரவேற்கிறது. இந்தக் காப்பீட்டை வாங்குவதனால் கிடைக்கும் நன்மைகள் முற்றிலும் சிறந்தவை! இருப்பினும், இந்த திட்டத்தின் கீழ் முழு நன்மைகளைப் பெறுவதற்கு ஒருவர் அறிந்திருக்க வேண்டிய சில நிபந்தனைகளும் உள்ளன:

 

  • ✓ நீங்கள் 70 வயதை அடைந்த பிறகு, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவின் கீழ் காப்பீடு நிறுத்தப்படும்

  • ✓ உங்கள் வங்கிக் கணக்கை மூடினால் அல்லது உங்கள் பாலிசியை நடைமுறையில் வைத்திருக்க போதுமான வங்கி இருப்பு இல்லை என்றால்

  • ✓ நீங்கள் பிரீமியத்தை செலுத்தும் கணக்குகளின் எண்ணிக்கை மூலம் பாலிசி காப்பீடு தீர்மானிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு தனிநபரும் ஒரு பாலிசிக்கு மட்டுமே தகுதியுடையவர்

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

இந்த பாலிசியின் நன்மைகளை தொடர்ந்து அனுபவிக்க, இது தொடர்பான விதிகளைக் கண்டறிய படிக்கவும்:

  • ✓ ஒரு நபர், ஒரு பாலிசி

  • ✓ பாலிசி பதிவுசெய்யப்பட்ட தேதி எதுவாக இருந்தாலும், பிரீமியம் தொகை மாறுபடாது

  • ✓ 70 வயது வரை காப்பீடு வழங்கப்படும்

  • ✓ பாலிசியை வழங்குவதற்கு வங்கியுடன் உங்கள் மொபைல் எண்ணை புதுப்பிப்பது முக்கியமாகும்

  • ✓ ஆட்டோ புதுப்பித்தலை செயல்படுத்த, உங்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்பட்ட எஸ்எம்எஸ் உறுதிப்படுத்தல் தேவைப்படுகிறது.

  • ✓ காப்பீட்டு பங்குதாரராக, உங்கள் தனிப்பட்ட தகவல்கள் பஜாஜ் அலையன்ஸ் உடன் பகிரப்படலாம்

  • ✓ காப்பீடு என்பது மிகுந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. எங்களிடம் வழங்கப்பட்ட தகவல் ஏதேனும் தவறாக இருந்தால், எங்களால் பாலிசியுடன் மேலும் தொடர முடியாது. நீங்கள் ஏற்கனவே செலுத்திய எந்தவொரு பிரீமியத்தையும் இழக்க நேரிடலாம்

  • ✓ குறிப்பிட்ட புதுப்பித்தல் தேதியில் உங்கள் தொடர்புடைய வங்கி கணக்கிலிருந்து புதுப்பித்தல் பிரீமியம் தானாக கழிக்கப்படும்

  • ✓ நீங்கள் ஆட்டோ டெபிட்டை இரத்து செய்ய விரும்பினால், அடுத்த பிரீமியம் செலுத்த வேண்டிய தேதிக்கு முன்னர் எங்களிடம் தெரியப்படுத்துங்கள்.

  • ✓ கூட்டுக் கணக்கு வைத்திருப்பவர்களும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவில் சேர வரவேற்கிறோம்! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பரிந்துரைக்கப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டும்

     

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா பாலிசி விதிமுறைகளை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

இந்த காப்பீட்டை வாங்குவதற்கு முன்னர் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்

  • சேர்க்கைகள்

  • விலக்குகள்

இது 1950-ஐப் போன்ற ஒரு உணர்வைத் தருகிறது! பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவுடன், ரூபாயின் மதிப்பு ஒரு காலத்தில் தீவிரமான வாங்கும் திறனைப் பெற்றுள்ளது. 

மேலும் படிக்கவும்

இது 1950-ஐப் போன்ற ஒரு உணர்வைத் தருகிறது! பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவுடன், ரூபாயின் மதிப்பு ஒரு காலத்தில் தீவிரமான வாங்கும் திறனைப் பெற்றுள்ளது. 

ஒரு விரிவான காப்பீட்டை வாங்குதல் என்று வரும்போது யோஜனா முக்கிய காரணியாக உள்ளது. முதலீட்டில் நீங்கள் பெறக்கூடிய வருமானங்களும் கணிசமானவை. இன்றே பதிவு செய்வதன் மூலம் நீங்கள் பெறக்கூடிய சில நன்மைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இறப்பு அல்லது நிரந்தர மொத்த இயலாமை ஏற்படும் பட்சத்தில் அதற்கான நன்மை

ஒரு விபத்தினால் ஏற்படும் உயிரிழப்போ அல்லது உடல் உறுப்பு இழப்புகளோ எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஈடுசெய்ய முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், கவலை மற்றும் உதவியற்ற தன்மையால் ஏற்படும் மனநல மற்றும் உணர்ச்சிபூர்வமான பாதிப்புகளை காப்பீடு சரிசெய்ய முடியும். 

மேலும் படிக்கவும்

இறப்பு அல்லது நிரந்தர மொத்த இயலாமை ஏற்படும் பட்சத்தில் அதற்கான நன்மை

ஒரு விபத்தினால் ஏற்படும் உயிரிழப்போ அல்லது உடல் உறுப்பு இழப்புகளோ எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஈடுசெய்ய முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், கவலை மற்றும் உதவியற்ற தன்மையால் ஏற்படும் மனநல மற்றும் உணர்ச்சிபூர்வமான பாதிப்புகளை காப்பீடு சரிசெய்ய முடியும். 

மருத்துவ அவசரநிலைகள் என்று வரும்போது பிஎம்பிஎஸ்ஒய் ஒரு முதலுதவி கிட் போன்ற அடிப்படையான ஒன்று.

ஒரு விபத்தினால் மரணம் ஏற்பட்டால், உங்கள் குடும்ப உறுப்பினருக்கு ரூ. 2 லட்சம் தொகை கிடைக்கும். ஒரு விபத்தினால் இரண்டு கைகள், கால்கள் அல்லது இரண்டு கண்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டால் நீங்கள் ரூ. 2 லட்சம் பெறுவீர்கள்.

ஒரு விபத்தினால் ஒரு கண்ணில் பார்வை இழப்பு மற்றும் கை அல்லது கால்களில் ஏதேனும் ஒன்று பாதிப்பு ஏற்பட்டால், 2 லட்சம் ரூபாய் தொகையைப் பெற உங்களுக்கு உரிமை உண்டு.

நிரந்தர பகுதியளவு இயலாமை ஏற்படும் பட்சத்தில் நன்மை

நீங்கள் ஒரு கண் பார்வையை இழந்தாலோ அல்லது உங்கள் கைகள் அல்லது கால்களில் ஒன்றை இழந்தாலோ, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவின் கீழ் நீங்கள் ரூபாய் 1 லட்சம் பெறுவீர்கள்.

1 ஆஃப் 1

நீங்கள் தற்கொலை செய்யும் பட்சத்தில், உங்கள் குடும்பத்தினர் கோரல் தொகையைப் பெற முடியாது

விபத்தின் விளைவாக கைகள், கண்கள் அல்லது கால்களுக்குச் சேதம் ஏற்பட்டு அதைச் சிகிச்சை மூலம் சரிசெய்ய முடியும் என்றால் உங்கள் கோரல் செயல்படுத்தப்படாது

1 ஆஃப் 1

பொறுப்புத் துறப்பு

நான் இதன் மூலம் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட்-க்கு ஒரு வசதியான நேரத்தில் மீண்டும் அழைக்க ஒரு குறிப்பிட்ட கோரிக்கையுடன் எனக்கு இணையதளத்தில் கிடைக்கும் தொடர்பு எண்ணிற்கு அழைக்க அங்கீகரிக்கிறேன். முழுமையாகவோ அல்லது பகுதியளவு முடக்கப்பட்ட வகையின் கீழ் தேசிய வாடிக்கையாளர் விருப்ப பதிவு (NCPR)-யில் எனது தொடர்பு எண் பதிவு செய்யப்பட்டாலும், எனது கோரிக்கைக்கு பதிலளிக்கப்பட்ட எந்தவொரு அழைப்பும் அல்லது SMS ஒரு தேர்ந்தெடுக்கப்படாத வணிக தகவல்தொடர்பு என்று கருதப்படாது என்று நான் அறிவிக்கிறேன், ஆனால் அழைப்பின் உள்ளடக்கம் பல்வேறு காப்பீட்டு தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அல்லது காப்பீட்டு வணிகத்தின் விளக்கம் மற்றும் கொள்முதல் ஆகியவற்றை விளக்குவதற்கான நோக்கங்களுக்காக இருக்கலாம். மேலும், இந்த அழைப்புகள் தரம் மற்றும் பயிற்சி நோக்கங்களுக்காக பதிவு செய்யப்படும் மற்றும் கண்காணிக்கப்படும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், மற்றும் தேவைப்பட்டால் எனக்கு கிடைக்கும்.

சரியான விலைகூறல் குறிப்பு ID-ஐ உள்ளிடுக

  • தேர்ந்தெடுக்கவும்
    தயவுசெய்து தேர்ந்தெடுக்கவும்
  • தயவுசெய்து உங்கள் கருத்தை எழுதவும்

எங்களை தொடர்பு கொள்வது எளிது